MARC காட்சி

Back
அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் கோயில்
245 : _ _ |a அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் கோயில் -
246 : _ _ |a மடப்புரம் காளி கோயில்
520 : _ _ |a மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில், சிவகங்கை மாவட்டத்தின், திருப்புவனம் வட்டத்துக்கு உட்பட்ட மடப்புரம் கிராமத்தில் அமைந்துள்ளது. மடப்புறம் என்பதே சரியான சொல்லாகும். பல கோயில் கல்வெட்டுகளில் மடப்புறம் என்ற சொல் பயின்று வருகின்றது. கோயில் விளங்கும் இடத்தில் உள்ள மடத்திற்கு ஏதாவது கொடையளித்தால் அது மடப்புறமாக கருதப்படும். அவ்வாறு இந்தக் கோயில் மடப்புற வளாகமாக அமைந்துள்ளது. இந்த கோயில் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. இங்கு பத்திரகாளி அம்மனின் இரு புறங்களில் பக்கத்திற்கு ஒன்றாக, இரண்டு பூதகணங்களின் தோள்கள் மீது, குதிரையின் கால்கள் தூக்கி வைத்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் அய்யனாரும், வினை தீர்க்கும் விநாயகரும் அருள்பாலிக்கிறார்கள். நேர்த்திக் கடன் செலுத்தும் பொருட்டு பத்திரகாளி அம்மனுக்கு எலுமிச்சம் பழ மாலைகள் சாத்தி வழிபடுகின்றனர்.
653 : _ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், குலதெய்வக் கோயில், நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டார் வழிபாடு, வீரர் வழிபாடு, நாட்டார் வழிபாட்டுத் தலங்கள், கிராமக் கோயில்கள், ஊர்த்தெய்வம், காவல் தெய்வங்கள், கிராமதேவதை, சிறுதெய்வக் கோயில், அய்யனார் வழிபாடு, ஐயனார், அய்யனார், அய்யன், அய்யனார் கோயில், அடைக்கலம் காத்த அய்யனார் கோயில், மடப்புரம் காளி கோயில், மடப்புரம், மடப்புறம், காளியம்மன், காளி வழிபாடு, திருப்பூவனம், சிவகங்கை மாவட்டம், மதுரை மாவட்டம், மதுரை மாவட்ட சிறுதெய்வக் கோயில்கள், மதுரை மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள்
700 : _ _ |a ஜெயந்தி அனில், கரண் சுதாகரன், முத்துராஜ், ரமேஷ் கமலா, சிவா
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
902 : _ _ |a 4574265305
904 : _ _ |a  bathirakaliammanmpm[at]tnhrce[dot]com
905 : _ _ |a பாண்டியர்
909 : _ _ |a 5
910 : _ _ |a காளி வழிபாடு இங்கு மிகவும் சக்தி வாய்ந்ததாக பின்பற்றப்படுகிறது.
914 : _ _ |a 9.9024001
915 : _ _ |a 78.1129201
918 : _ _ |a பத்திரகாளி
923 : _ _ |a வைகை ஆறு, மணிகர்ணி தீர்த்தம், பிரம்மகுண்ட தீர்த்தம்
925 : _ _ |a உச்சிக்கால பூசை, திருவனந்தல் பூசை, காலசந்தி பூசை, அர்த்தசாம பூசை
926 : _ _ |a மாசி மகாசிவராத்திரி, ஆடித் திருவிழா, தை வெள்ளி, பங்குனித் திருவிழா
927 : _ _ |a இல்லை
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a குதிரையின் அடிப்புறத்தில் பத்திரகாளியம்மன் நின்ற கோலம். மிகப்பெரிய வெண்குதிரை பாய்ந்த நிலையில் அதன் முன்னங்கால்கள் இரு பூதகணத்தாரின் தலை மேல் வைக்கப்பட்டுள்ளன. பத்திரகாளியம்மனைச் சுற்றிலும் பெண்கள் பக்தியுடன் அன்னைக்கு சமர்ப்பிக்க தட்டுகளுடன் நிற்கின்றனர். மிகப்பெரிய பீடத்தின் மீது பத்திரகாளியம்மன் எட்டு கைகளுடன் காட்டப்பட்டுள்ளார். பீடத்தின் இருபுறமும் இரு காவல் பூதங்கள் பெரிய உருவத்தினராய் காட்டப்பட்டுள்ளனர். இச்சிற்பங்கள் அனைத்தும் சுதையால் செய்யப்பட்டு வண்ணந்தீட்டப்பட்டவைகளாகும்.
930 : _ _ |a பாண்டிய மன்னா்களால் மடப்புரம் காளியம்மன் காவல் தெய்வமாக வணங்கப்பட்டது. 30அடி உயரம் உள்ள பிரம்மாண்டமான குதிரை சிலையின் நிழலில் மேற்கூரை எதுவும் இல்லால் திறந்தவெளியில் மூலவரான காளியம்மன் அருட்பாலிக்கிறார். 2300 ஆண்டுகளுக்கு முன் மும்மூர்த்திகளும் காளி தாயாருடன் திருப்பூவனம் தலத்துக்கு வேட்டையாட வருகின்றனர்.. அப்போது இத்தலம் கருவேலம் மரங்கள் சூழ்ந்த பெருங்காடாக இருந்து வந்தது. அப்போது சிவனார் பார்வதியைப் பார்த்து காடு வெகு தொலைவில் பரந்து உள்ளது. உன்னால் வர இயலாது. ஆகவே நீ இங்கேயே இரு எனச்சொல்கிறார். அப்போது பார்வதி நான் எப்படி தனிமையில் இருப்பது எனக்கேட்க சிவனார் அய்யனார் என்ற மகனை உருவாக்கி பார்வதிக்கு துணையாய் வைத்துவிட்டுச் செல்கிறார். நான் இங்கே இருப்பதால் இந்தத் தலத்துக்கு சிறப்பு நிலை கொடுக்க வேண்டும் எனப் பார்வதி கேட்க, சிவன் இத்தலத்திலிருந்து 3 மைல் தொலைவிற்குள் வைகை ஆற்றில் குளிப்பவர்களுக்கு காசியில் குளித்த புண்ணியம் கிடைக்கும் எனச் சொல்கிறார். அதன் பின்னர் பார்வதி காளி வடிவில் இத்தலத்தில் இருந்து வருகிறாள். ஒருமுறை பக்தன் ஒருவன் காளியின் முன் அமர்ந்து வரம் வேண்ட, அவனை குதிரை வடிவு கொள்ளச் செய்து தனக்கு நிழல் கொடுக்க அருள் செய்கிறாள் காளி. அன்று முதல் அந்தப் பக்தன் குதிரை வடிவிலிருந்து தனது இருகால்களை தூக்கி நின்று நிழல் கொடுக்க காளி நின்ற நிலையில் இருந்து அருள் செய்து வருகிறாள். சிவன் கோயிலுக்கு எதிரே மணிகர்ணி தீர்த்தம் உள்ளது. அது காசியில் உள்ள மணிகர்ணி கட்டத்துக்கு நிகரானது. இது தவிர பிரம்ம குண்டம் என்றொரு தீர்த்தமும் உள்ளது. மற்றொரு புராணவரலாறும் இக்கோயிலுக்கு உள்ளது. ஒரு பிரளய காலத்தில் மதுரை நகரம் வெள்ளத்தால் சூழப்பட்டு முற்றிலும் மறைந்து விட்டது. அப்போது மீனாட்சி தாயார் மதுரையின் எல்லையைக் காட்டவேண்டும் எனக் கேட்க ஆதிகேசவன் வெளிப்பட்டு மதுரையில் நான்கு புறத்தையும் வளைத்து தற்போது உள்ள மடப்புரத்தில் படத்தையும், வாலையும் ஒன்று சேர்ந்து இருந்த இடம். படப்புரம் என்று ஆகி நாளடைவில் மடப்புரம் என்றாயிற்று என்பர்.
932 : _ _ |a ஐந்து நிலை இராஐகோபுரம் கோயில் அமைவிடத்திற்கு வடக்கே அமைக்கப்பட்டுள்ளது. மூன்று நிலை இராஐகோபுரம் கோயில் அமைவிடத்திற்கு வடக்கே உள்ளது. அருள்மிகு பத்திரகாளியம்மன் சன்னதி கருவறையின்றி வெட்டவெளியில் அமைந்துள்ளது. பத்திரகாளியம்மன் குதிரையின் நடுவில் நின்றகோலத்தில் அருட்பாலிக்கிறார்.விநாயகர் சன்னதி பத்திரகாளியம்மனுக்கு இடது புறத்தில் கிழக்கு முகமாக அமைந்துள்ளது. அருள்மிகு கருப்பணசாமி சன்னதி பத்திரகாளியம்மனுக்கு வலது புறத்திலும், அதனையடுத்துஅருள்மிகு காணியாண்டவர் சன்னதியும், பேச்சியம்மன் காமாட்சியம்மன் சன்னதி அய்யனார் சன்னதிக்கு அருகிலும் அமைந்துள்ளன. அருள்மிகு அரசப்பராஜா சன்னதி பத்திரகாளியம்மனுக்கு எதிரே மேற்கு நோக்கி உள்ளது. வீரபத்திரசாமி சன்னதி அய்யனார் சன்னதிக்கு வலதுபுறத்திலும், அருள்மிகு முத்துக்கருப்பர்சாமி சன்னதி அய்யனார் சன்னதிக்கு வலதுபுறத்திலும், அருள்மிகு சின்னஅடைக்கன் சன்னதி பத்திரகாளியம்மன் சன்னதிக்கு எதிரேயும் அமைந்துள்ளது. அதனையடுத்து அருள்மிகு சிற்பி சன்னதி பத்திரகாளியம்மன் சன்னதியும் அமைந்துள்ளன.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறை
934 : _ _ |a திருப்பூவணம் பூவணநாதர் கோயில், வைகை ஆறு
935 : _ _ |a மதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் தேசிய நெடுஞ்சாலை 85 வழியாக ஏறக்குறைய 24 கி.மீ. தொலைவில் திருப்பூவணத்திற்கு அருகில் மடப்புறம் காளியம்மன் கோயில் அமைந்துள்ளது.
936 : _ _ |a காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
937 : _ _ |a மடப்புரம்
938 : _ _ |a மதுரை
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a திருப்பூவணம் வட்டார விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_00420
barcode : TVA_TEM_00420
book category : நாட்டுப்புறத் தெய்வம்
cover images TVA_TEM_00420/TVA_TEM_00420_மதுரை_மடப்புரம்_அடைக்கலம்-காத்த-அய்யனார்-மற்றும்-பத்திரகாளியம்மன்-கோயில்-0002.jpg :
Primary File :

TVA_TEM_00420/TVA_TEM_00420_மதுரை_மடப்புரம்_அடைக்கலம்-காத்த-அய்யனார்-மற்றும்-பத்திரகாளியம்மன்-கோயில்-0001.jpg

TVA_TEM_00420/TVA_TEM_00420_மதுரை_மடப்புரம்_அடைக்கலம்-காத்த-அய்யனார்-மற்றும்-பத்திரகாளியம்மன்-கோயில்-0002.jpg

TVA_TEM_00420/TVA_TEM_00420_மதுரை_மடப்புரம்_அடைக்கலம்-காத்த-அய்யனார்-மற்றும்-பத்திரகாளியம்மன்-கோயில்-0003.jpg

TVA_TEM_00420/TVA_TEM_00420_மதுரை_மடப்புரம்_அடைக்கலம்-காத்த-அய்யனார்-மற்றும்-பத்திரகாளியம்மன்-கோயில்-0004.jpg

TVA_TEM_00420/TVA_TEM_00420_மதுரை_மடப்புரம்_அடைக்கலம்-காத்த-அய்யனார்-மற்றும்-பத்திரகாளியம்மன்-கோயில்-0005.jpg

TVA_TEM_00420/TVA_TEM_00420_மதுரை_மடப்புரம்_அடைக்கலம்-காத்த-அய்யனார்-மற்றும்-பத்திரகாளியம்மன்-கோயில்-0006.jpg

TVA_TEM_00420/TVA_TEM_00420_மதுரை_மடப்புரம்_அடைக்கலம்-காத்த-அய்யனார்-மற்றும்-பத்திரகாளியம்மன்-கோயில்-0007.jpg

TVA_TEM_00420/TVA_TEM_00420_மதுரை_மடப்புரம்_அடைக்கலம்-காத்த-அய்யனார்-மற்றும்-பத்திரகாளியம்மன்-கோயில்-0008.jpg

TVA_TEM_00420/TVA_TEM_00420_மதுரை_மடப்புரம்_அடைக்கலம்-காத்த-அய்யனார்-மற்றும்-பத்திரகாளியம்மன்-கோயில்-0009.jpg

TVA_TEM_00420/TVA_TEM_00420_மதுரை_மடப்புரம்_அடைக்கலம்-காத்த-அய்யனார்-மற்றும்-பத்திரகாளியம்மன்-கோயில்-0010.jpg

TVA_TEM_00420/TVA_TEM_00420_மதுரை_மடப்புரம்_அடைக்கலம்-காத்த-அய்யனார்-மற்றும்-பத்திரகாளியம்மன்-கோயில்-0011.jpg

TVA_TEM_00420/TVA_TEM_00420_மதுரை_மடப்புரம்_அடைக்கலம்-காத்த-அய்யனார்-மற்றும்-பத்திரகாளியம்மன்-கோயில்-0012.jpg

TVA_TEM_00420/TVA_TEM_00420_மதுரை_மடப்புரம்_அடைக்கலம்-காத்த-அய்யனார்-மற்றும்-பத்திரகாளியம்மன்-கோயில்-0013.jpg

TVA_TEM_00420/TVA_TEM_00420_மதுரை_மடப்புரம்_அடைக்கலம்-காத்த-அய்யனார்-மற்றும்-பத்திரகாளியம்மன்-கோயில்-0014.jpg

TVA_TEM_00420/TVA_TEM_00420_மதுரை_மடப்புரம்_அடைக்கலம்-காத்த-அய்யனார்-மற்றும்-பத்திரகாளியம்மன்-கோயில்-0015.jpg